தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது! - இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்புக் குழு

ராமநாதபுரம்: வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இரண்டாவது நாளாக சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

farmers
farmers

By

Published : Dec 15, 2020, 3:59 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், சி.பி.எம். மயில்வாகனன் தலைமையில் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

விவசாயிகளுக்கு விரோதமாக மக்களவையில் நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும், மின்சார திருத்த மசோதா 2020ஐ திரும்பப் பெறக் கோரியும் டெல்லியில் முற்றுகையிட்டு போராடும் விவசாயிகளை ஆதரிக்கும் பொருட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details