தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக லேசான முதல் கனமழை வரை பெய்துவருகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மழை பெய்துவருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்த மழை அளவு 476.00 மில்லி மீட்டர் பதிவு - ராமநாதபுரம் மழை அளவு
ராமநாதபுரம்: மாவட்டத்தின் மொத்த மழை அளவு 476.00 மில்லி மீட்டராகப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வாலிநோக்கத்தில் 79.40 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது.
இன்று காலை 6 மணிவரை பெய்த மழை அளவானது, ராமநாதபுரத்தில் 22.00 மில்லி மீட்டரும், தொண்டியில் 22.20 மில்லி மீட்டரும், பரமக்குடியில் 39.40 மில்லி மீட்டரும் எனப் பதிவாகியுள்ளது.
இதில், அதிகபட்சமாக வாலிநோக்கத்தில் 79.40 மில்லி மீட்டரும், ராமேஸ்வரத்தில் 56.20 மில்லி மீட்டரும், தங்கச்சிமடத்தில் 36.00 மில்லி மீட்டரும் பாம்பனில் 26.00 மில்லி மீட்டரும், வட்டாணத்தில் 36.00 மில்லி மீட்டரும், திருவாடானையில் 30.20 மில்லி மீட்டரும், மொத்த மழை அளவு 476.00 மில்லி மீட்டரும், சராசரியாக 29.75 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது.