தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கை: தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர் - Ramanathapuram district news

ராமநாதபுரம்: கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட தன்னார்வலர்கள் வருகை தருமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்

By

Published : May 28, 2021, 8:33 PM IST

கரோனா இரண்டாம் அலையின் பரவலைத் தடுக்கும் வகையில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், "கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னார்வத் தொன்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்திட மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன .

மேலும் மாநிலக் குழுவிற்கான மின்னஞ்சல் முகவரி: tnngocoordination@gmail.com தன்னலம் கருதாமல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட இக்குழுக்கள் பாலமாக செயல்படும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்டங்களில் செயல்படும் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூகநல அலுவலரை அணுகவும். 9150346853 இந்த தொலைபேசியை அணுகவும்" எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details