தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்த வேண்டும்' - மாவட்ட ஆட்சியர் - ramanathapuram collector

ராமநாதபுரம்: கரோனாவால் உயிரிழந்த கீழக்கரை நபரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என ராமநாதபுரம் ஆட்சியர் வீர ராகவ ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் ஆட்சியர் வீர ராகவ ராவ்
ராமநாதபுரம் ஆட்சியர் வீர ராகவ ராவ்

By

Published : Apr 7, 2020, 1:58 PM IST

கரோனா வைரஸ் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், " கரோனாவால் உயிரிழந்த கீழக்கரை நபரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 50 நபர்களும், குடும்ப உறுப்பினர்கள் 11 பேரும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், வேறு யாரேனும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தால் அவர்களும் தங்களை தாங்களே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ராமநாதபுரம் ஆட்சியர் வீர ராகவ ராவ்

மேலும், டெல்லி மாநாட்டில் கலந்துவிட்டு ராமநாதபுரம் திரும்பிய 25 நபர்களில் 23 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 4 ஆயிரத்து 777 பேர் வந்துள்ளனர் அவர்களில் 2 ஆயிரத்து 66 நபர்கள் தொடர்ந்து வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க:ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி - காவல்துறை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details