தமிழ்நாட்டில் நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே, இன்று மாலை ஆறு மணியுடன் இறுதி பரப்புரை நிறைவடைந்தது. முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்தின் நகர்ப் பகுதிகளில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், இந்திய முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அமமுக வேட்பாளர் ஆனந்த் ஆகியோர் தீவிர தேர்தல் பரப்புரையை காலையிலிருந்தே தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு செய்தனர்.
அனல் பறந்த தேர்தல் பரப்புரை ஓய்ந்தது...! நாளை மறுநாள் வாக்குப்பதிவு - ராமநாதபுரம்
ராமநாதபுரம்: இன்றுடன் தேர்தல் பரப்புரை முடிவடைந்ததால் பாஜக, இமுலீக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் பரப்புரை மாலை 6 மணி வரை அனல் பறந்தது.
தேர்தல் பரப்புரை
இந்நிலையில், இவர்களின் தேர்தல் பரப்புரைக் காரணமாக ராமநாதபுரம் நகர்ப் பகுதியில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மேலும், தேர்தல் களம் இறுதி நாளில் அனல் பறந்தது என்றே கூறலாம்.
பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் மணிகண்டன், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா ஆகியோர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். அதேபோல் இந்திய முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி மற்றும் அமமுக வேட்பாளர் ஆனந்த் ஆகியோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.