ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்றது. இதில் பரமக்குடி, முதுகுளத்தூர் ஒன்றியங்களில் நடந்த துணைத் தலைவர் தேர்தலுக்கு பெரும்பான்மையான ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் அதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 13 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் அதிமுக உறுப்பினர்கள் ஏழு பேரும், திமுக உறுப்பினர்கள் ஆறு பேரும் இருந்தனர். ஒன்றியக் குழு துணைத் தலைவருக்கான தேர்தலில் அதிமுக உறுப்பினர் சரயு ராஜேந்திரனும், திமுக சார்பில் ம.நதியாவும் போட்டியிட்டனர். இதில் சரயு ராஜேந்திரன் ஏழு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ம.நதியா ஆறு வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.