ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்து ரமேஷ். இவரது மனைவி கஜேந்தினி தனது இருசக்கர வாகனத்திற்கு உரிமம் எடுக்க, ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலத்திற்கு இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினர் கருப்பசாமியுடன் இன்று (ஜூலை 17) காலை சென்றுள்ளார்.
ராமநாதபுரம் சென்று பணிகளை முடித்துவிட்டு, மீண்டும் ராமேஸ்வரம் திரும்பினர். அப்போது வரும் வழியில் வாலாந்தரவை அருகே கீரிப்பிள்ளை வலசையில் உள்ள பிரப்பன்வலசை பெட்ரோல் சேமிப்பு நிலையம் அருகே சென்றபோது ராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற கார், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.