ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 27ஆம் தேதி 11 மீனவர்கள் இரண்டு விசைப்படகில் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றனர்.
அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களைக் கைதுசெய்து, பின் அவர்களை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விசைப்படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து மீட்டுத்தர வேண்டியும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க முடியாத படகுகளுக்கு ரூ. 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே அனைத்து மீனவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்பும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஆனால் ஒட்டுமொத்த மீனவர்களையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கின்னஸ் சாதனை பரதநாட்டியம்: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு