தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக கிடைக்கும் - பேராசையால் ரூ. 3 லட்சத்தை இழந்த கர்ப்பிணி - pregnant woman lost amount

ராமநாதபுரத்தைச் சேர்ந்த கர்ப்பிணி, இணையதள நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாக கிடைக்கும் என்ற ஆசையில் 3 லட்சம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேராசையால் ரூ.3 லட்சத்தை இழந்த கர்ப்பிணி
பேராசையால் ரூ.3 லட்சத்தை இழந்த கர்ப்பிணி

By

Published : Aug 1, 2021, 9:51 PM IST

ராமநாதபுரம்: பரமக்குடி அருகேவுள்ள மேலாய்க்குடியைச் சேர்ந்தவர் 32 வயதான கர்ப்பிணி. இவரின் கணவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் வேலை பார்க்க விரும்பிய கர்ப்பிணி, குறிப்பிட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

இரட்டிப்பு பனம் தரும் நிறுவனம்

அப்போது, இணையதள வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால், அவை இரட்டிப்பாக்கித் தரப்படும் என கூறப்பட்டுள்ளது. அதை நம்பி ஆரம்பத்தில் 3 ஆயிரம் ரூபாயை ஜூலை 17ஆம் தேதி முதலீடு செய்துள்ளார். அந்த பணம் இரட்டிப்பானதாக அவரது வங்கிக்கணக்கில் குறிப்பிட்டு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதையடுத்து, பிகார், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர், கர்ப்பிணியிடம் செல்போன் மூலம் பேசியுள்ளனர். அவர்கள், தாங்களும் இந்த இணையதள நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்ததன் மூலம் தற்போது செல்வந்தர்கள் ஆகியிருப்பதாக கூறியுள்ளனர்.

பணத்தை இழந்த கர்ப்பிணி

இந்த ஆசை வார்த்தைகளை நம்பிய கர்ப்பிணி, தனது பிரசவ சிகிச்சைக்காக வைத்திருந்த 3 லட்சம் ரூபாயை இணைய வழியில் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அதன்படி அவரது கணக்கில் 5 லட்சம் ரூபாய் இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. ஆனால், அதை அவர் எடுக்க முயற்சித்தபோது கணக்கு முடக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால், சந்தேகமடைந்த கர்ப்பிணி, இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட நுண்குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இணையவழி நிறுவனம் மூலம் மோசடி செய்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கிரெடிட் கார்டு மோசடி - இருவருக்கு சிறை

ABOUT THE AUTHOR

...view details