தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூட்டிய கோயில் வாசலில் பக்தர்கள் சாமி தரிசனம் - Panguni Uthira Festival

ராமநாதபுரம்: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ராமேஸ்வரம் மேல வாசலில் அமைந்துள்ள முருகன் கோயிலில் பூட்டிய நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பூட்டிய கோயில் வாசலில் பக்தர்கள் சாமி தரிசனம்
பூட்டிய கோயில் வாசலில் பக்தர்கள் சாமி தரிசனம்

By

Published : Apr 7, 2020, 12:57 PM IST

நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் சென்று பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அனைத்தும் பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பூட்டிய கோயில் வாசலில் பக்தர்கள் சாமி தரிசனம்

இதனிடையில் பங்குனி உத்திரத் திருவிழா தமிழ்நாடு முழுவதும் வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தச் சூழலில் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்ட நிலையில், ராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயில் மேற்கு வாசலில் அமைந்துள்ள முருகன் கோயிலில் நடைகள் சாத்தப்பட்டன.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் முருகன் கோயில் வாசலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு செல்கின்றனர் அதேபோல் ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற வழிவிடு முருகன் கோயிலிலும் மக்கள் பூட்டிய கோயில் முன்பு நின்று வழிபட்டு சென்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details