நாடாளுமன்ற தேர்தல் கடந்த 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றில் இருந்து
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலாகின 72 மணி நேரங்களுக்கு மேலாக நடைமுறையில் உள்ளது.
தேர்தல் அதிகாரிகளின் அலட்சியம்: பொதுமக்கள் புகார் - தேர்தல் அதிகாரிகளின் அலட்சியம்
ராமநாதபுரம்: தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பரமக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் ஜெயலலிதா படத்தை அகற்றாமல் தேர்தல் அதிகாரிகளின் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் புகாரளித்துள்ளனர்.
அரசு மற்று தனியார் இடங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படம், சுவரொட்டிகள், வாசகங்கள் நீக்கப்பட்ட வேண்டும் என்பது தேர்தல் விதி.ஆனால் நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத் தேர்தலை சந்திக்க உள்ள பரமக்குடி (தனி) சட்டமன்ற அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தையா பெயர் உள்ள பலகையும் அலுவலகம் உள் பகுதியில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவப்படமும் உள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் படங்கள் இன்னமும் நீக்கப்படாமல் இருப்பது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது.உடனடியாக அதனை அங்கு இருந்து அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.