தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வலியுறுத்தல் - போராட்டம்! - Students struggle

ராமநாதபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரி மாணவர்கள் பெற்றோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம்
மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம்

By

Published : Jun 25, 2021, 9:18 AM IST

ராமநாதபுரம்: அரசு வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் எட்டாம் வகுப்பு பூர்த்தி செய்த நிலையில், 9 ஆம் வகுப்பு பயிலும் வசதி இல்லாத காரணத்தால், இந்தப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், இதே பள்ளியில் கல்வியை தொடர வேண்டும் என வலியுறுத்தி, பள்ளியில் பயின்ற மாணவர்கள் சான்றிதழை பெற மறுத்து, பள்ளி வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெற்றோரும் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து மாணவரின் பெற்றோர் ஒருவர் கூறும் பொழுது, “ராமநாதபுரம் நகர் பகுதியில் நீண்ட நாட்களாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லாததால் அரசு பள்ளியில் பயில வேண்டிய மாணவர்கள் மீண்டும் தனியார் பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. நெடுந்தூரப் பயணத்தை தவிர்ப்பதற்காகவே அவ்வாறு செல்கின்றனர். தற்போது அவர்கள் மீண்டும் தனியார் பள்ளிக்கு செல்வதால் தமிழ்நாடு அரசு மருத்துவ இட ஒதுக்கீட்டில் உள்ள 7.5 விழுக்காடு பெற முடியாத நிலை ஏற்படும். அரசு இதில் கவனம் கொடுத்து, ராமநாதபுரம் நகர் பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வரதட்சணை தீயில் கருகிய விஸ்மயா- நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details