ராமேஸ்வரத்தில் தீவையும், மண்டபம் நிலப்பகுதியும் இணைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது பாம்பன் ரயில் பாலம் தான். ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு 100 ஆண்டுகளைக் கடந்த பழைமையான பாலத்தில் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு, அங்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், மையப் பகுதியில் உள்ள தூக்குப் பாலம் பழைய முறையில் மேல் தூக்கி, கீழ் இறக்கும் வகையில் உள்ளது.
கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் பாம்பனில் புதிய இரயில் பாலம் ரூ.250 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதனையடுத்து, பாம்பன் கடலில் ரூ.250 கோடி மதிப்பில் புதிய ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, கடந்த மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன்பின், பாம்பன் கடலில் உப்பு, காரத் தன்மை குறித்து 40 நாட்கள் கடலில் துளையிட்டு, மணல் சேகரித்து சென்னையில் பரிசோதனை செய்தனர்.