பாம்பன் தூக்குப் பாலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி விரிசல் ஏற்பட்டது. இதனால் ராமேஸ்வரத்திற்கான ரயில் சேவை இரண்டு மாதத்திற்கு மேலாக முற்றிலும் நிறுத்தப்பட்டது. பாலத்தை சீரமைக்கும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வந்த நிலையில், பாலத்தின் இரண்டு புறமும் சென்சார் கருவிகள் பொருத்தும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. இதுகுறித்த அறிக்கையை கட்டுமான நிறுவனம் ரயில்வே நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க உள்ளது.
கட்டுமானப் பணிகள் நிறைவு: பாம்பன் பாலத்தில் மீண்டும் ரயில் சேவை
ராமநாதபுரம்: "பாம்பன் தூக்குப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், விரைவில் ராமேஸ்வரத்தில் ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளது" என்று ரயில்வேயின் தலைமை செயல் நிர்வாக இயக்குனர் வினோத் தெரிவித்துள்ளார்.
பாம்பன் தூக்குப் பாலம்
இந்நிலையில் இன்று ரயில்வேயின் தலைமை செயல் நிர்வாக இயக்குனர் வினோத் தலைமையில் 4 பேர் அடங்கிய குழு பாலத்தை ஆய்வு செய்தனர். பின்னர் வினோத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாலத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. கட்டுமான நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையைப் பொருத்து விரைவில், ரயில்கள் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.