தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடல் நீரை குடிநீராக்கும் திட்ட ஒப்பந்தம் முடிவு - மக்கள் போராட்டம் - etv bharat

கடல் நீரை குடிநீராக்கும் திட்ட ஒப்பந்தம் முடிவதை கண்டித்து ராமநாதபுரம் சிஐடியுடன் பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.

கிராம மக்கள் போராட்டம்
கிராம மக்கள் போராட்டம்

By

Published : Jul 26, 2021, 5:48 PM IST

ராமநாதபுரம்: கடந்த 25 ஆண்டுகளாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் முதுகுளத்தூர், கடலாடி, திருப்புல்லாணி, நயினார் கோயில், சிக்கல், பரமக்குடி உள்ளிட்ட 9 இடங்களில் இயங்கிவருகின்றன. இங்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

வருகின்ற ஜூலை 31ஆம் தேதியுடன் கடல் நீரை குடிநீராக்கும் திட்ட ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள இருப்பதாக ஒப்பந்ததாரர்கள் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர்.

கிராம மக்கள் போராட்டம்

இதன் மூலம் வேலை வாய்ப்பு இழப்பு, குடிநீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிஐடியுடன் பொதுமக்கள் இணைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களை காவல் துறையினர் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அலுவலர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:கன்வேயர் பெல்ட் அமைக்கும் விவகாரம் - எண்ணூர் மீனவர்களுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை

ABOUT THE AUTHOR

...view details