இந்தியா முழுவதும் கரோனா வைரஸைத் தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. இதனால் வெளி மாநிலத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
தற்பொழுது அந்தந்த மாநில அரசுகள், அவர்களின் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்துக் கொள்ளும் நடவடிக்கையை எடுத்துவருகின்றன.
வெளி மாநிலத் தொழிலாளர்கள் கோரிக்கை இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கால் சிக்கித்தவிக்கும் கொல்கத்தா, உத்தரப் பிரதேசம், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:உணவு மறுக்கப்பட்ட அவலம்: சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு 22 கி.மீ. நடந்துவந்த தொழிலாளர்கள்!