ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குறிஞ்சி ஊரணி பகுதியில் வசித்து வரும் வேலு என்பவரின் மகள் துர்க்கை ஈஸ்வரி (19). இவருக்கும் காளையார் கோவிலை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக வளையபட்டியில் வசித்து வந்துள்ளனர்.
இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட சண்டையால் பெற்றோர் வீட்டிற்கு வந்த துர்க்கை ஈஸ்வரி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.