ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த வீரராகவராவ், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று(நவ.15) மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் பொறுப்புக்களை முன்னாள் ஆட்சியர் வீரராகவ ராவ் ஒப்படைத்தார்.
ராமநாதபுரம் ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொறுப்பேற்பு...!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று(நவ.15) பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆட்சியராக பொறுப்பேற்ற பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், ”ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் கல்விக்கும், மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பேன். பின் தங்கிய ராமநாதபுரம் மாவட்டத்தை, முன்னேற்றுவதற்கு தொழில் வளர்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். என்னுடைய முழு உழைப்பையும் ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்காக வழங்க முடிவு செய்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.