இராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். நேற்று இரவு அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க கீழக்கரை பகுதிக்கு சென்றனர்.
வாக்கு சேகரிக்க சென்ற நயினார் நாகேந்திரனுக்கு எதிர்ப்பு! - BJP
இராமநாதபுரம்: வாக்குச்சேரிக்க சென்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இஸ்லாமிய மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
BJP
அப்போது நயினார் நாகேந்திரனுக்கு எதிராக இஸ்லாமிய மக்கள் கோஷமிட்டனர். வாக்கு சேகரிக்க உள்ளே விடாததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து அவர்கள் திரும்பிச் சென்றனர். இதேபோல் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி பெரியபட்டிணம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற போது காலி மது பாட்டில் வீசப்பட்டது. இதில் திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக அவைத் தலைவர் உடையத் தேவன் தலையில் பலத்த காயமடைந்தார்.