தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நவராத்திரி விழாவை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு!

ராமநாதபுரம்: நவராத்திரி விழாவை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்

Navaratri festival in ramnathapuram

By

Published : Oct 9, 2019, 8:15 AM IST

ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் குல தெய்வமான ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ராமலிங்க விலாசம் அரண்மனை அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் நவராத்திரி கலை விழா, மன்னர் காலம் முதல் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்த நவராத்திரி விழாவில் கவியரங்கம், ஆன்மிகச் சொற்பொழிவு, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் ஆண்டுதோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றுவருகிறது. விழாவின் நிறைவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

முன்னதாக மாலை ராமநாதபுரத்தில் அமைந்துள்ள குண்டுக்கரை முருகன் கோயில், ராமலிங்கம் சாமி திருக்கோயில், கோதண்டராமர் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் உற்சவ மூர்த்திகள் முன்னாள் பவனி வர அரண்மனையிலிருந்து அம்மன் புறப்பட்டார். செல்லும் வழியில் சிறப்பு தீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டன.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ராஜராஜேஸ்வரி அம்மன், மகர்நோன்பு திருக்கோலத்தில் அசூரனை அம்பெய்தி வதம் செய்தார். இவ்விழாவில் மக்கள் பலர் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

இதையும் படிங்க: சீருடை அணியாமல் பள்ளிக்குச் செல்லும் காஷ்மீர் மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details