ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே பொட்டகவயல், வடக்குத் தெருவை சேர்ந்த முனியான்டி மகன் கர்ணன் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கருப்பன் மகன் அர்ச்சுனன் என்பவருக்கும் கடந்த 13ஆம் தேதி இரவு விறகு வெட்டியது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் வாய் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து சென்றனர்.
முன்விரோதம் - ஒருவர் கொலை - தேவிப்பட்டினம்
ராமநாதபுரம்: தேவிப்பட்டினம் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
kolai
இந்நிலையில் அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் முன்பு தூங்கி கொண்டிருந்த கர்ணன் மீது கோயில் வாசலில் பொங்கல் வைப்பதற்காக கிடந்த கல்லை தலையில் போட்டுவிட்டு அர்ச்சுனன் தப்பியோடிவிட்டார். இதில் தலையில் படுகாயமடைந்த கர்ணன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கர்ணன் இறந்துவிட்டதை அடுத்து அர்ச்சுனனை காவல் துறையினர் கைது செய்தனர்.