ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் சேகர். இந்து முன்னணி பிரமுகர் தவசிமுனி என்பவர் குத்திக் கொலை செய்த வழக்கில், இவர் கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறைக் கைதி உடல் நலக்குறைவால் உயிரிழப்பு - murder convict dead
ராமநாதபுரம்: சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை குற்றவாளி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நிமோனியா காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.