ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4ஆம் தேதி அதேப் பகுதியைச் சேர்ந்த அந்தோணி, மியோன், வின்தாஸ், ஸ்டீபன் ஆகிய நான்கு மீனவர்கள் பைபர் படகு மூலம் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் நான்குபேரும் மாயமாகினர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அந்தோணி, ஸ்டீபன் கரை திரும்பிய நிலையில், மற்ற இருவரும் சடலமாக கரை ஒதுங்கினர்.
கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க எம்.பி புதிய கோரிக்கை
ராமநாதபுரம்: கடலில் மீன்பிடிக்கும்போது மாயமாகும் மீனவர்களை செயற்கைக்கோள் உதவியுடன் கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எம்.பி நவாஸ் கனி கோரிக்கை வைத்துள்ளார்.
இதையறிந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இறந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல், ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், ”கடலில் மூழ்கி உயிரிழந்த இரண்டு மீனவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் இதுபோல் கடலில் மாமாகும் மீனவர்களை செயற்கை கோள் உதவியுடன் பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.