தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நேற்று (மே.25) முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மருந்தகங்கள், நாட்டு மருந்துக்கடைகள் உள்பட சில வணிக நிறுவனங்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காலத்தில் மக்களின் அத்தியாவசியத் தேவையான காய்கறிகள், பழங்கள் ஆகியன நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களின் வீட்டுக்கே சென்று விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில், மொத்தமாக 969 காய்கறிகள், பழங்கள் விற்கும் நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் தற்போது 525 நடமாடும் வாகனங்கள் காய்கறி, பழங்கள் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்றும்(மே.24), இன்றும் (மே.25) சேர்த்து சுமார் 169 மெட்ரிக் டன் காய்கறிகள் நடமாடும் வாகனங்கள் மூலமாக விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.