தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய நிகழ்வு! - ramanathapuram cloud rare scenario

ராமநாதபுரம்: கடல் நீரை மேகமாக மாற்றும் அதிசய நிகழ்வை மீனவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.

ராமநாதபுரம்
ராமநாதபுரம்

By

Published : Nov 5, 2020, 12:00 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராமேஸ்வரம் அருகே வேதாளை கடலில் நேற்று காலை 10 மணியளவில் கடலில் கரும்மேகக்கூட்டங்களுக்கு மத்தியில் சுழல் காற்று சிறிது நேரம் தோன்றி மறைந்ததாக நேரில் பார்த்த மீனவர்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர்.

கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய நிகழ்வு

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அலுவலர்கள் கூறுகையில், "கடலின் மேல் வீசக்கூடிய காற்று குளிர்ந்த காற்றாகவும், சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் சுழல் எனப்படும் அதிசய நிகழ்வு ஏற்படுகிறது. பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும்போது சூழல் உருவாகி, மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும்போது சுழல் மறைந்துவிடும்.

இந்த அதிசய நிகழ்வின்போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். கடலில் அரிதாக நிகழக்கூடிய இத்தகைய சுழல் நிகழ்வை கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், மீனவர்கள் , கடலில் பயணம் மேள்பவர்கள், வானியல் ஆய்வாளர்கள் ஆகியோர் காண வாய்ப்புகள் அதிகம் உண்டு" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:முத்துகோரமலையின் ரம்மியமான காட்சி!

ABOUT THE AUTHOR

...view details