தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லோக் அதாலத்: இராமநாதபுரத்தில் 960 வழக்குகள் தீர்வு காண திட்டம்! - இராமநாதபுரத்தில் 960 வழக்குகள் தீர்வு காண திட்டம்

இராமநாதபுரம்: லோக் அதாலத் மூலம் மாவட்ட நீதிமன்றத்தில் 960 வழக்குகளை தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது.

லோக் அதாலதில் இராமநாதபுரத்தில் 960 வழக்குகள் தீர்வு காண திட்டம்!
லோக் அதாலதில் இராமநாதபுரத்தில் 960 வழக்குகள் தீர்வு காண திட்டம்!

By

Published : Dec 12, 2020, 2:20 PM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று (டிச.12) மாவட்ட அளவிலான தேசிய மைக்ரோ லோக்-அதாலத் நடைபெற்றுவருகிறது.

அந்தவகையில், இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இன்று (டிச. 12) மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் 960 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. கடந்த 10 நாட்களில் 30 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் இராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை, இராமேஸ்வரம் ஆகிய நீதிமன்றங்களில் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி விபத்து நிவாரணம், சிவில், வங்கி உள்ளிட்ட இதர வழக்குகளின் மூலமாக இன்று (டிச.12) ரூ. 2.4 கோடி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தரப்பட்டுள்ளது என முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

இதையும் படிங்க...முதுநிலை மருத்துவம் முடித்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் - உபி அரசு!

ABOUT THE AUTHOR

...view details