தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயுதங்களைக் காட்டி பெட்ரோல் பங்கில் 1.70 லட்சம் ரூபாய் கொள்ளை - கீழக்கரை பெட்ரோல் பங்க்

கீழக்கரை அருகே பெட்ரோல் பங்கில் ஆயுதங்களைக் காட்டி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

keelakarai-petrol-bulk-1-dot-70-lakhs-robbery-cctv-footage
ஆயுதங்களை காட்டி பெட்ரோல் பங்கில் 1.70லட்சம் ரூபாய் கொள்ளை

By

Published : Sep 10, 2021, 12:01 PM IST

Updated : Sep 10, 2021, 2:32 PM IST

ராமநாதபுரம்:கீழக்கரை வண்ணாந்தரவை மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில், முகமூடி அணிந்து வந்த மூன்று நபர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஊழியர்களைத் தாக்கி, ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கீழக்கரை துணைக் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையிலான காவலர்கள் குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

ஆயுதங்களைக் காட்டி பெட்ரோல் பங்கில் 1.70 லட்சம் ரூபாய் கொள்ளை

இருசக்கர வாகனத்தை மோர் குளம் கிராமத்தின் அருகே நிறுத்திவிட்டு கொள்ளையர்கள் தப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளைச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:இளம்பெண் கூட்டு பாலியல் - காதலன் உள்பட 4 பேர் கைது

Last Updated : Sep 10, 2021, 2:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details