தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த பெண்கள்! - kurungulam

ராமநாதபுரம்: மாநிலம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும் நிலையில், சண்டையின்றி தண்ணீர் பிடிக்க புதிய முறையை கையாண்டுள்ளனர் கருங்குளம் கிராமப் பெண்கள்.

water

By

Published : Jun 21, 2019, 12:14 AM IST

Updated : Jun 21, 2019, 7:38 AM IST

தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக் குறையினால், நாள்தோறும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், மக்களுக்கிடையே தள்ளுமுள்ளுகளும் சண்டைகளும் அரங்கேறிவருகின்றன. இந்தத் தண்ணீர் சண்டைக்குத் தீர்வு காணும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

சுமார் 100 குடும்பங்கள் வசிக்கின்ற இந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பப் பெண்களின் பெயர்களையும் சீட்டில் எழுதி வைத்து, தண்ணீர் விநியோகிக்கப்படுவதற்கு முன்பாக, அந்த சீட்டுக்களைக் குலுக்கி அதில் வரும் பெயர்களை வரிசையாக அடுக்கி வைத்துவிடுகின்றனர்.

தண்ணீர் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த கருங்குளம் பெண்கள்

பின்னர், தண்ணீர் வரும் நாளன்று வரிசைப்படி பெண்கள் தண்ணீர் பிடிக்கின்றனர். சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை விநியோகிக்கப்படும் தண்ணீர் யாருடன் நிற்கிறதோ, அதற்கு அடுபடியாக வரும் நபர்கள் அடுத்த முறை பிடித்துக்கொள்ளலாம். இதற்காக, 'பிடித்தவர்கள்', 'பிடிக்காதவர்கள்'என இரண்டு பட்டியலை வைத்துள்ளனர் இந்தக் கிராம மக்கள்.

இந்த வழிமுறை மற்ற கிராமப் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது, காவிரி கூட்டுக் குடிநீர்த் தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும் கிராமப் பெண்கள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், தண்ணீர், தமிழ்நாடு கிராம மக்களிடம் பெரும் பிரச்னையை உருவாக்கி வருவதாகவும் முறையாகத் தண்ணீர் விநியோகம் வழங்க வேண்டும் என்றும் கருங்குளம் கிராம மக்கள் ஆட்சியர், அரசு அலுவலர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

Last Updated : Jun 21, 2019, 7:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details