தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறுக்கப்படும் சாதி சான்றிதழ்: குழந்தைகளுக்காக தொடர்ந்து போராடும் காட்டு நாயக்கர் சமூகம்

ராமநாதபுரம்: குழந்தைகளின் பள்ளிப் படிப்பைக் கருத்தில்கொண்டு சாதிச் சான்று வழங்கக்கோரி காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டு நாயக்கர்
காட்டு நாயக்கர்

By

Published : Oct 19, 2020, 6:33 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட தேவிபட்டினம் கிராமம், வடக்குத் தெருவில் பூர்விகமாகக் கொண்டு காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்துவருகின்றனர்.

வேட்டையாடுவது இவர்களது குலத் தொழில், தற்போது வேட்டையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ஊர், ஊராகச் சென்று தெரிந்த வேலையைச் செய்து பிழைப்பு நடத்திவருகின்றனர்.

தங்கள் வாழ்வாதாரம் உயரும் என கனவுகளோடு வாழ்ந்துவரும் இவர்களது குழந்தைகள் 10ஆம் வகுப்புவரை மட்டும்தான் படிக்க முடிகிறது. காரணம் அதற்கு மேல் படிக்கக் காட்டு நாயக்கர் சாதி சான்றிதழ் கிடைப்பது இல்லை.

இதனால் குழந்தைகள் மேற்கொண்டு கல்வி கற்க முடியாமல் பாதியிலேயே அவர்கள் எதிர்காலம் பறிபோய்விடுவதாகவும், இந்த நிலைக்குக் காரணம் தங்கள் எந்த அடிப்படை அரசின் உதவிகளைப் பெறமுடியாமல், பிற மக்களைப் போல் சமூகத்தில் உயர முடியாமலும் இருப்பதற்கு தங்களது காட்டு நாயக்கன் சமுதாயம் அரசின் பழங்குடியின பட்டியலில் இல்லாததே என்று இவர்கள் குமுறுகின்றனர்.

இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் சான்றிதழ் தர மறுக்கிறார்கள். எனவே குழந்தைகள் பள்ளிப் படிப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டுக் சாதிச் சான்று கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி... காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தஞ்சம்!

ABOUT THE AUTHOR

...view details