திரைப்பட நடிகரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், நேற்று பாஜக வேட்பாளர் மற்றும் பரமக்குடி வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், வீட்டில் உணவு அருந்திய பின் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் உள்ளது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் உடல் இன்று நல்லடக்கம்! - உடல்
ராமநாதபுரம்: மக்களவை முன்னாள் உறுப்பினர் ஜே.கே.ரித்தீஷின் உடல் ராமநாதபுரத்திலுள்ள அவரது சொந்த ஊரான மணக்குடியில் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இதனையடுத்து கேணிக்கரை அருகே உள்ள அண்ணாநகர் இல்லத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஜேகே ரித்தீஷ் என் உடல் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் மணக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக அவரின் மைத்துனர் ரத்தினம் தெரிவித்தார். இதற்கிடையில் அதிமுக எம்.பி. அன்வர் ராஜா மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், இன்று திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
.