தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் ஐ.யு.எம்.எல் வேட்பாளர் மனு தாக்கல்! - வேட்பாளர்

ராமநாதபுரம்: இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் ஐ.யு.எம்.எல் வேட்பாளர் நவாஸ் கனி மனு தாக்கல் செய்தார்.

இராமநாதபுரத்தில் ஐ.யு.எம்.எல் வேட்பாளர் மனு தாக்கல்!

By

Published : Mar 25, 2019, 11:26 PM IST

ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வேட்பு மனு மார்ச் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ளது. அக்கட்சியின் சார்பில் நவாஸ் கனி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்தார்.

அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அலுவலர்கள் ஐந்து பேரை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனர். ஆனால், இரண்டு வழக்கறிஞர்களையும் அனுமதிக்கக் கோரி காவல்துறை அலுவலர்களிடம், திமுக கட்சியின் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர்களையும் காவல்துறையினர் உள்ளே அனுமதித்த பிறகு நவாஸ் கனி வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கொ.வீர ராகவ ராவிடம் தாக்கல் செய்தார்.

தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நவாஸ் கனி, காவிரி கூட்டுக்குடிநீர் மற்றும் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டதால் அதிமுக அதனை முறையாக நடைமுறைப்படுத்துவதில்லை எனவும், ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்கு தக்க நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details