திமுக கூட்டணிக் கட்சியான முஸ்லீம் லீக் கட்சி கட்சியின் ராமநாதபுரம் நாடாளுமன்ற வேட்பாளரான நவாஸ் கனி இன்று ராமேஸ்வரத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள மாங்காடு, ராம தீர்த்தம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த சமயத்தில் தேர்தல் விதி முறையை மீறும் விதமாக 100க்கும் மேற்பட்ட இருச்சக்கர வாகனத்தில் கட்சியினர் அவருடன் வந்தனர்.