ராமநாதபுரம்:திருவாடானை தாலுகா நம்புதாளை மீனவ கிராமத்திலிருந்து நேற்று (செப்.13) மாலை 3 மணியளவில் நான்கு மீனவர்கள் படகில் மீன்பிடிக்கச் சென்றனர். கடல் சீற்றம் காரணமாக அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து நடுக்கடலில் சிக்கி உயிருக்குப் போராடி வந்தனர்.
அப்போது, அவர்களிடமிருந்த செல்போன் மூலம் கரையில் இருந்த மீனவர்களை தொடர்பு கொண்டு தங்களின் நிலை குறித்து தெரியப்படுத்தினர்.
இதுதொடர்பாக கடலோர காவல் படையினரிடம் சென்று நிலைமையை எடுத்துரைத்தனர். ஆனால், அவர்கள் மாலை 6 மணிக்கு மேல் தங்களால் பணி செய்ய இயலாது என பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.