ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், இம்மானுவேல் சேகரன் இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். 1954ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்தியவர் என்றார்.
மோடி ஆட்சியின் நூறுநாள் சாதனை இதுதான்...! - ஸ்டாலின் எதைச் சொல்லுகிறார்னு தெரியுமா?
ராமநாதபுரம்: பாஜகவினர் மோடி ஆட்சியின் நூறுநாள் கொண்டாட்டத்தை கொண்டாடிவரும் நிலையில், அது குறித்து திமுக தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிப்பீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "அது அரசுப் பொறுப்பில் இருப்பவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி, திமுக ஆட்சி மீண்டும் வரும் என்ற நம்பிக்கையை நீங்கள் கேட்கும் கேள்வி எடுத்துக்காட்டுகிறது. அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், மோடி ஆட்சியின் 100 நாள் குறித்து கூற வேண்டுமானால் நாட்டின் பொருளாதாரம் ஐந்து விழுக்காட்டிற்கும் கீழ் சென்றதுதான் மோடி அரசின் 100 நாள் சாதனை என்றார்.