தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவகங்களில் காடைக்கறிக்குப் பதிலாக காக்கா கறி? - இருவர் கைது - உணவகங்களுக்காக காக்கைகள் வேட்டை: இருவர் கைது!

ராமநாதபுரம்: தனுஷ்கோடி பகுதிகளில் 150 காக்கைகளை வேட்டையாடிய இருவரிடம் வனத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

உணவகங்களுக்காக காக்கைகள் வேட்டை: இருவர் கைது!
உணவகங்களுக்காக காக்கைகள் வேட்டை: இருவர் கைது!

By

Published : Jan 29, 2020, 6:24 PM IST

Updated : Jan 29, 2020, 6:38 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து - தனுஷ்கோடி செல்லும் சாலைப்பகுதியில் இருபுறமும் அடர்ந்த சவுக்கு மரக்காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் பலவகையான உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள், ஆஸ்திரேலிய பிளம்பிங்கோ பறவைகள் வசிக்கின்றன.

இந்நிலையில் அடையாளம் தெரியாத இருவர் அந்தப் பகுதியில் பறந்துகொண்டிருந்த சுமார் 150 காகங்களைத் தீவனம் கொடுத்து வேட்டையாடி சாக்கு மூட்டையில் கட்டிவைத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

உணவகங்களுக்காக காக்கைகள் வேட்டை: இருவர் கைது!

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத் துறை அலுவலர்கள் இருவரிடமிருந்தும் உயிரிழந்த காக்கைகளைப் பறிமுதல்செய்தனர். இந்தக் காக்கைகளை வேட்டையாடி ராமேஸ்வரம் உணவகங்களில் காடை போன்று விற்பனை செய்யப்படுகிறதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...’பயணிகள் தாமதத்திற்கு விமானங்களைக் குறை கூற முடியாது’ - உச்ச நீதிமன்றம்

Last Updated : Jan 29, 2020, 6:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details