ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்குத் தென்மேற்குப் பருவமழை பெய்யவில்லை. இதனால் பல கிராமப்பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது, மக்கள் குடிநீர் தேவைக்காக பல கி.மீ. தூரம் சென்று குடிநீர் எடுத்துவரும் நிலை உருவாகியுள்ளது.
ராமநாதபுரத்தில் மழை வேண்டி கோயிலில் யாகம்
ராமநாதபுரம்: கடும் வறட்சியை போக்குவதற்காகவும், தற்போது நிலவிவரும் கடும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க வேண்டி, சேது மாதவ கோயிலில் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் யாகம் நடத்தப்பட்டது.
இராமநாதபுரத்தில் மழை வேண்டி கோயிலில் யாகம்
இந்த நிலையில் கடும் வறட்சியை போக்குவதற்காக, இந்துசமய அறநிலையத் துறைக்கு கீழ் செயல்பட்டுவரும் முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்ற அரசு உத்தரவின்படி, இன்று ராமநாதபுரத்தில் உள்ள சேது மாதவ கோயிலில், வேதம் முழங்க வருண ஜபம், வேள்வி யாகம் நடத்தப்பட்டு, பின் புனித நீரை கோயிலின் கிணற்றிலும் நந்தி பகவானுக்கும் ஊற்றப்பட்டது. இந்த பூஜையின்போது சிவாச்சாரியார்கள் திருக்கோவில் ஊழியர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.