சென்னை, புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நிபாஷ். இவர் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் ஒன்றை அளித்தார். அதில், " அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து இணையத்தில் பதிவு செய்துவிடுவதாகக் கூறி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டி வருகிறார் எனப் புகார் தெரிவித்தார்.
அதனடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (27) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.