ராமநாதபுரம்:முதுகுளத்தூர் அருகேவுள்ள ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி (31). இவர் தனியார் வாடகை வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராதிகா (26). இவர்களுக்கு 6 வயதில் மகள் இருக்கிறாள். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராதிகா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர், உறவினர்கள் சமாதானம் செய்ததையடுத்து கணவருடன், ராதிகா சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ராதிகாவின் கழுத்தில் அணிந்திருந்த தாலியை யாரோ அறுத்துச் சென்று விட்டனர். இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.