ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திற்கு தமிழ்நாட்டின் பல பகுதியில் இருந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடல்நடுவில் செல்லும் பாலத்தில் பயணம் செய்ய ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ரயிலில் பயணிக்க ஆர்வம் கொள்கின்றனர்.
காற்றின் வேகம் அதிகரிப்பு - ராமேஸ்வரத்தில் தடைப்பட்ட ரயில் சேவை! - 3 trains stopped
ராமநாதபுரம்: காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் பாம்பன் பாலத்தின் வழியாக இயக்கப்படவிருந்த மூன்று ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், காற்றின் வேகம் குறைந்தவுடன் ரயில்கள் இயக்கப்படும் என தெற்குரயில்வே தெரிவித்துள்ளது.
தடைப்பட்ட ரயில் சேவை
இந்நிலையில் இன்று பாம்பன் பகுதியில் மணிக்கு சுமார் 60கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் சென்னை விரைவு ரயில், சேது விரைவு ரயில் உள்ளிட்ட மூன்று ரயில்கள் அக்காள் மடம், ரமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது எனவும், காற்றின் வேகம் குறைந்தவுடன் இந்த ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.