ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வறண்ட வானிலையே நிலவி வந்தது. மேலும், வெப்பமும் நாளுக்கு நாள் அதிகரித்ததால் மக்கள் குளிர்பானங்களையும், பழச்சாறுகளையும் நோக்கி படை எடுத்து வந்தனர்.
ராமநாதபுரத்தில் இடியுடன் கூடிய கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி - மழை
ராமநாதபுரம்: கோடைக்காலத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
rain
இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும், இடியுடன் காற்றும் சேர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பநிலை தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.