தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தலைமையாசிரியை - தமிழ் செய்திகள்

ராமநாதபுரம்: பரமக்குடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை அப்பள்ளி தலைமையாசிரியை வழங்கினார்.

மாணவர்களுக்கு உதவிகரம் நீட்டிய தலைமையாசிரியை
மாணவர்களுக்கு உதவிகரம் நீட்டிய தலைமையாசிரியை

By

Published : May 5, 2020, 3:46 PM IST

கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதில், முக்கிய நடவடிக்கையாக மே 17ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் தினசரி கூலி வேலை பார்ப்பவர்கள் என பல தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் போதுமான வருமானமின்றி மிகவும் சிரமப்படுகின்றனர்.

மாணவர்களுக்கு உதவிகரம் நீட்டிய தலைமையாசிரியை

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள கீழ பெருங்கரை அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 40 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு தலைமையாசிரியையாக உமா மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது சொந்த செலவில் 40 பள்ளி மாணவர்களுக்கும் தலா ஐந்து கிலோ அரிசி, முகக்கவசம், வைட்டமின்கள் மாத்திரைகள் வழங்கினார்.

மேலும் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வெளியில் செல்ல வேண்டும். தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கபட்டால் தொடர்ந்து நிவாரணம் வழங்குவேன் என ஆசிரியை கூறினார். தனது சொந்த செலவில் பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கி அசத்திய தலைமையாசிரியை உமாவை கிராம மக்கள் பாராட்டினர்.

இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details