ராமநாதபுரம்: நாட்டின் 72 ஆவது குடியரசு தினவிழா வருகின்ற 26ஆம் தேதி செவ்வாய் கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதிலும் உள்ள முக்கிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து மற்றும் சுற்றுலா தலங்களுக்கு காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் ரயில் பாலத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ! - 72 ஆவது குடியரசு தினவிழா
குடியரசு தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
பாம்பன் ரயில் பாலத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் இரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய ரயில்வே காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக காவல்துறையினர் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களைக் கொண்டு 2.065 மீட்டர் நீளம் உள்ள பாலம் முழுவதிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர். குடியரசு தினம் வரை அங்கே காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:மெரினாவில் குடியரசு தின இறுதி ஒத்திகை!