தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கச்சத்தீவு பிரச்னைக்கு சுமுக தீர்வு எட்டப்படும்' - மத்திய இணையமைச்சர் வி.கே. சிங்

கச்சத்தீவு பிரச்னைக்கு சுமுக தீர்வு எட்டப்படும் என தமிழ்நாடு பாஜக இணைப் பொறுப்பாளரும், மத்திய இணையமைச்சருமான வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

Union Minister VK Singh
'கச்சத்தீவு பிரச்னைக்கு சுமூக தீர்வு எட்டப்படும்' - மத்திய இணையமைச்சர் வி.கே.சிங்

By

Published : Mar 17, 2021, 12:35 PM IST

Updated : Mar 17, 2021, 9:19 PM IST

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக மாவட்ட அவைத் தலைவர் முருகேசனை அவரது இல்லத்தில் வைத்து தமிழ்நாடு பாஜக இணை பொறுப்பாளரும், மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்றார்.

திமுக 170 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக ஒரு குடும்பக் கட்சி, அது எப்போதும் மக்கள் நலனுக்காக செயல்பட்டதில்லை. குடும்ப நலனுக்காகவே செயல்பட்டுள்ளது. திமுக ஒரு ரவுடி கட்சி, ஊழல்வாதிகள் நிறைந்த கட்சி என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

'கச்சத்தீவு பிரச்னைக்கு சுமுக தீர்வு எட்டப்படும்' - மத்திய இணையமைச்சர் வி.கே.சிங்

மேலும், கச்சத்தீவு பிரச்னைக்கு சுமுக தீர்வு எட்டப்படும் என்று தெரிவித்த அவர், ராமநாதபுரத்தில் பயணிகள் விமானம் அமைப்பது குறித்து மோடி தலைமையிலான அரசு சாதகமான முடிவை விரைவில் தெரிவிக்கும் என்றார்.

இதையும் படிங்க:ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராக தயார்! - மு.க.ஸ்டாலின்

Last Updated : Mar 17, 2021, 9:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details