ராமநாதபுரம்: கீழக்கரையைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (45). இவர் மீது கீழக்கரை, தனுஷ்கோடி, பரமக்குடி நகர் காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட கஞ்ச கடத்தல் வழக்கு மற்றும் ஒரு கொலை வழக்கு உள்ளது.
இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், சாகுல் ஹமீதுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிற்கு பரிந்துரை செய்தார்.