தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓமன் நாட்டில் காணாமல் போன மீனவர்கள் - உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.! - தமிழக மீனவர்கள் 5 பேர் ஓமன் நாட்டில் காணாமல் போய் உள்ளனர்

ராமநாதபுரம்: ஓமன் நாட்டில் காணாமல் போன நான்கு மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரி உறவினர்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

காணாமல் போன 4 மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரி உறவினர்கள் ஆட்சியரிடம் மனு

By

Published : Sep 27, 2019, 8:07 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையைச் சேர்ந்த மீனவர்கள் கே.கார்மேகம், கா.காசிலிங்கம், தி.ராமநாதன் ஆர்.காசிலிங்கம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தாலுகா ஏ.சிலுவைதாசன் ஆகிய ஐந்து தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் வங்கதேச நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் என எட்டு பேர் கடந்த 14-ஆம் தேதி ஓமன் நாட்டில் மசீரா தீவிலிருந்து ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்றனர் .

காணாமல் போன 4 மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரி உறவினர்கள் ஆட்சியரிடம் மனு

திடீரென அப்பகுதி கடலில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் காணாமல் போன ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நான்கு பேரையும் மீட்க மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி ஆகியோர், மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகத் கூறினார்.

இது குறித்து கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி, "தமிழ்நாடு மீனவர்கள் ஐந்து பேர் ஓமன் நாட்டில் காணாமல் போய் உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மற்ற மீனவர்கள் ஆறு படகுகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் கண்டுபிடிக்க முடியாமல் கரை திரும்பியுள்ளனர். அவர்களை அந்நாட்டு அரசு ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படியுங்க:

மாயமான எட்டு மீனவர்களில் நான்கு மீனவர்கள் உயிருடன் மீட்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details