ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூர் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பரமக்குடியில் இருந்து காக்கூர் நோக்கி கார் ஒன்றுவந்தது. அந்தக் காரை நிறுத்தி காவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது அதில் தடைசெய்யப்பட்ட 100 பாக்கெட் புகையிலை, 37 மூட்டை அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரில் வந்த சேலத்தை சேர்ந்த ஓட்டுநர் அய்யாத்துரை, உதவியாளர் நடராஜன் ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.