ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கிராமப்புறங்களில் உள்ள ஊரணி கண்மாய்கள் நிரம்பின.
மேலும் அங்கிருந்து தண்ணீர் வெளியேறி வீடுகளை சூழ்ந்துள்ளன. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.