தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4 மீனவர்களுக்கு 15 நாட்கள் சிறை விதித்து உத்தரவு! - srilankan officers

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட நான்கு மீனவர்களுக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து காங்கேசன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

fishermen

By

Published : Sep 2, 2019, 7:00 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி 440 படகில் 1,600க்கும் மேற்பட்ட மீனவர் அனுமதி சீட்டுப் பெற்று கடலுக்குச் சென்றனர். இவர்களில் பொன்னழகு என்பவருக்குச் சொந்தமான IND TN 15 MM 91 என்ற படகில், பொன்னழகு, சுகுமார், கணேஷன், முருகன் ஆகிய நான்கு பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்களின் படகு கச்சத்தீவு அருகே பழுதாகி நின்றது.

கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்கள்

இதையடுத்து, மீனவர்கள் நான்கு பேரும் கச்சத்தீவில் தஞ்சம் அடைந்தனர். பின்னர், மீன்வளத்துறை, இந்திய கடல் படை, இலங்கை கடற்படைக்கு தகவல் அளித்தது. இதைத்தொடர்ந்து, கச்சத்தீவு சென்ற இலங்கைக் கடற்படை, தீவில் இருந்த மீனவர்கள் நான்கு பேரை மீட்டு காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து காங்கேயன் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தினர். பின்னர், வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி வரை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details