தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் உறவினர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு! - கரோனா நோயாளிகள்

ராமநாதபுரம்: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் உறவினர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் உறவினர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு

By

Published : May 15, 2021, 2:56 PM IST

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதியவர்கள் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக குடும்பத்தினர் கரோனா வார்டில் வெளியில் காத்திருந்து கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா 2வது அலை பரவலைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடைகள், திறக்கப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. அவர்களுக்கும் உதவும் வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் கலவை சாதம் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

இதன்படி ராமநாதபுரம் தேவஸ்தானம் சார்பில் ராணி ராஜேஸ்வரி நாச்சியார், அறங்காவலர் குமரன் சேதுபதி ஆகியோர் ஏற்பாட்டின்படி, அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 200 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், அரசின் மறு உத்தரவு வரும் வரை, உணவு வழங்க உள்ளதாக சமஸ்தான தேவஸ்தான திவான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: பேரிடர் மேலாண்மைத் துறை அவசர ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details