தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக மீனவர்கள் தினம்: கடலில் உயிரிழந்த மீனவர்களுக்கு மலரஞ்சலி

ராமநாதபுரம்: உலக மீனவர்கள் தினத்தையொட்டி கடலில் உயிரிழந்த மீனவர்களுக்கு பாம்பன் கடற்கரையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

tribute to the fishermen
tribute to the fishermen

By

Published : Nov 21, 2020, 7:42 PM IST

சர்வதேச மீனவர்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் பாம்பன் வடக்கு கடற்கரையில் மீனவர் தின கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாட்டுப் படகு மீனவர் சங்க தலைவர் ராயப்பன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கடலில் மீன்பிடிக்கச் சென்று இறந்த மீனவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு, கடலில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பாம்பனில் உள்ள பெரியநாயகி மகாலில் பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு நடத்திய மீனவர் தின விழாவில், சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர்கள், நெய்தல் ஆண்டோ, பீட்டர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாணவர்களின் சிலம்பாட்டமும் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details